ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு ஏலத்திற்கு வருமா?

வியாழன், 16 பிப்ரவரி 2017 (07:17 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்றாலும் அவர் மரணம் அடைந்துவிட்டதால் அவருக்கான தண்டனை விடுவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் தீர்ப்பின்படி கட்டியே தீர வேண்டும்



இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை 100 கோடி ரூபாயை எப்படி செலுத்துவது என்ற சந்தேகத்துக்கு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டி உள்ளது.

இதன்படி ஜெயலலிதாவின் சொத்துகளை விற்று அதில் வரும் பணத்தில் அபராத தொகையை வசூலிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. ஆனால் அதேசமயம் ஜெயலலிதா அரசியலுக்கு வந்து ஊழல் செய்து சம்பாதித்த சொத்துகள் தவிர, திரைத் துறையில் உழைத்து சம்பாதித்த சொத்துகளும் இந்த பட்டியலில் அடங்கி இருப்பதால் அந்த சொத்துகளையும் நீதிமன்றம் கையகப்படுத்தி ஏலம் விடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் மட்டுமே சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும், அது தவிர  சொகுசு பங்களாவுடன் கூடிய கோடநாடு பகுதியில் உள்ள 900 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் என்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்தின் மதிப்பு 14.44 கோடி என்றும் ஐதராபாத்தில் உள்ள வணிக சொத்தின் மதிப்பு 13.34 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் எந்தெந்த சொத்துக்களை அபராதத்திற்காக ஏலத்திற்கு வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்