43 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம்?

வெள்ளி, 2 மார்ச் 2018 (11:24 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 43 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது.
 
2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
 
இதனையடித்து மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினனவிடம் அமைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பொதுப்பணித்துறை நினைவிடம் கட்டுவது தொடர்பான வரைபடத்தை தயாரித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வரைப்படத்திற்கேற்ப குறைந்த செலவில் நினைவிடம் கட்டித்தர நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக அரசு டெண்டர் விட்டுள்ளது.
 
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவிற்கு 43 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளததாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்