சர்வாதிகாரி போல மாறிய ஸ்டாலின் - ஜெயகுமார் அப்செட்!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (10:23 IST)
திமுக பொறுப்பேற்ற நாளில் இருந்து அதிமுகவை அழித்துவிட வேண்டும் என நினைக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. 

 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு, அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கு மற்றும் நில மோசடி வழக்கு ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இந்நிலையில் நேற்று மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர் இன்று காலை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை அதிமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர். 
 
திருச்சியில் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதலையானதும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், திமுக பொறுப்பேற்ற நாளில் இருந்து அதிமுகவை அழித்துவிட வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். திமுக அரசு தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. அதிமுகவின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்