இந்திய அரசியல் கட்சிகளுக்கு வாட்ஸ் அப் எச்சரிக்கை

வியாழன், 7 பிப்ரவரி 2019 (07:07 IST)
தற்போதைய டிஜிட்டல் உலகில் தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள் இணையதளங்களை குறிப்பாக சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. குறிப்பாக ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றன

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் வாட்ஸ் அப் இணையதளத்தை ஒருசில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் தகவல் தொடர்பு தலைவரான கார்ல் வோக் கூறியதாவது:

வாட்ஸ் அப் சேவை எந்த காரணத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்த சில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. எந்த காரணத்தை முன்னிட்டும் வாட்ஸ் அப்-ஐ தவறாக பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை மீறி தவறாக பயன்படுத்தினால் வாட்ஸ்அப் சேவையை தடை செய்ய வேண்டியிருக்கும். அத்துடன் இந்தச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து அதனை தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இருப்பினும் அரசியல் கட்சிகள் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்