ரஜினி என்னை நிச்சயமாக கூப்பிட மாட்டார்: திருநாவுக்கரசர்

புதன், 6 பிப்ரவரி 2019 (21:27 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும் தனது 40 ஆண்டுகால நண்பருமான திருநாவுக்கரசரை சந்தித்து தனது மகளின் திருமண பத்திரிகையை அளித்தார். இதுவொரு குடும்ப நிகழ்ச்சிக்கான சந்திப்பாக இருந்தாலும் இந்த சந்திப்பு நடந்த நேரம் என்பது திருநாவுக்கரசர் கட்சி பதவியை இழந்த நேரம் என்பதால் இந்த சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை தனது பதவியை பிடுங்கியதால் அவர் வேறு கட்சிக்கு தாவக்கூடும் என்றும், குறிப்பாக ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் அவர் இணைவார் என்றும் கூறப்பட்டது. மேலும் ரஜினி அமெரிக்காவில் இருந்தபோது திருநாவுக்கரசரும் அமெரிக்காவில் இருந்ததால் இருவரும் அமெரிக்காவில் ரகசிய சந்திப்பை நடத்தியிருக்கலாம் என்றும் வதந்திகள் கிளம்பின

இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் தனது கட்சியில் சேருமாறு என்னை ரஜினி கூப்பிட மாட்டார் என்றும் அப்படியே ரஜினி கூப்பிட்டாலும் காங்கிரசை விட்டு போகமாட்டேன் என்றும், ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதே தனது லட்சியம் என்றும் அந்த லட்சியத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்