ஆர்.கே.நகரில் அதிமுகவை தோற்கடிக்க ஜெயக்குமார் ஒருவரே போதும் - புகழேந்தி

வியாழன், 30 நவம்பர் 2017 (14:26 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மதுசூதனை தோற்கடிக்க அமைச்சர் ஜெயக்குமார் போதும் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.


 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. பலரும் ஆ.கே.நகரில் போட்டியிட விருப்ப மனு அளித்து இருந்தனர். இன்று காலை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் ஆட்சி மன்ற குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஆலோசனை செய்தனர்.
 
அதிமுகவின் அவைத்தலைவரான மதுசூதனனை வேட்பாளராக அறிவித்தனர். கடந்த முறை பிரசாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மதுசூதனனை கடுமையாக தாக்கி பேசினார். தற்போது ஆர்.கே.நகரில் மதுசூதனன் அமோக வெற்று பெறுவார் என கூறியுள்ளார். 
 
இந்நிலையில் மதுசூதனன் போட்டியிடுவது குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியதாவது:-
 
டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மதுசூதனனை தோற்கடிக்க அமைச்சர் ஜெயக்குமார் பொதும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்