நாச்சியார் படம் வரட்டும் ; உங்களுக்கே புரியும் - சர்ச்சை வசனம் பற்றி ஜோ. விளக்கம்

வியாழன், 30 நவம்பர் 2017 (12:09 IST)
பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது. இந்த டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.


 
இந்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வந்த நிலையில் ஜோதிகா மீதும், இயக்குனர் பாலா மீதும் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
 
அந்நிலையில் மேட்டுப்பாளையத்தை அடுத்து  கரூர் நீதிமன்றத்திலும் இதே விவகாரத்திற்காக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய வசனத்தை பேசிய ஜோதிகா மீதும், இந்த படத்தை இயக்கிய பாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
 
இந்நிலையில், கடந்த 29ம் தேதி மாலை சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள ஒரு கடை திறப்பு விழாவிற்கு வந்த ஜோதிகாவிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜோதிகா “நாச்சியார் படம் வெளியானதும் டீசரில் இடம்பெற்ற வசனம் குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் விளக்கம் கிடைக்கும். தற்போது அதைப்பற்றி மேலும் பேச விரும்பவில்லை” என பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்