ஜல்லிக்கட்டு கலவரம்; ஆட்டோவிற்கு தீ வைத்த பெண் போலீஸ் : விரைவில் நடவடிக்கை?

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (13:03 IST)
ஜல்லிக்கட்டு தொடர்பாக எழுந்த கலவரத்தில் பொதுமக்களின் வாகனங்களை சேதாரப்படுத்திய சில போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


 

 
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை, அங்கிருந்து வெளியேற்றும் பணியில் கடந்த 23ம் தேதி அதிகாலை தமிழக போலீசார் ஈடுபட்டனர். அப்போது, மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. மோதல் கலவரமாக மாறியது.
 
அதில் ஐஸ்ஹவுஸ் பகுதி காவல் நிலையத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.  அதேபோல், நிறுத்தப்பட்டிருந்த 2 ஆட்டோக்கள் மற்றும் குடிசைகளுக்கு சில போலீசார் தீ வைக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறியிருந்தார்.


 

 
இந்நிலையில், இதுபற்றி விசாரணையில் இறங்கிய போலீசார், ஆட்டோ மற்றும் குடிசைகளுக்கு தீ வைத்த ஒரு பெண் போலீஸ் உடபட பொதுமக்களின் வாகனங்களை சேதப்படுத்திய சில போலீசாரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. அதேபோல், வன்முறைக்கு காரணமான 7 அமைப்பை சேர்ந்த பலரை கண்டுபிடித்துள்ளனர். அவர்களை கைது செய்யும் முயற்சியில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர். 
 
அடுத்த கட்டுரையில்