மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவசர சட்டம் என்பது தற்காலிக நடவடிக்கை, இந்த சட்டம் வெறும் கண் துடைப்பே எங்களுக்கு நிரந்தர தீர்வாக நிரந்தரமான ஒரு சட்டமே வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒரே குரலில் கூறிவந்தனர்.
இந்நிலையில் அரசு காவல்துறையை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விட்டு அராஜகமாக அவர்களை ஒடுக்குகின்றது. சென்னை மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களை வழுக்கட்டாயமாக போலீஸார் வெளியேற்றி வருகின்றனர். இதைடுத்து மாணவர்கள் கடல் பகுதிக்கு சென்று போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் மெரினா முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டில் தற்போது வந்துள்ளது. அந்த சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகின்றன.