ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைப்பு.. மத்திய அரசு அதிகாரிகள் அதிரடி..!

Mahendran
வியாழன், 29 பிப்ரவரி 2024 (10:07 IST)
ரூ.2000 கோடிக்கு போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாடி டெல்லியில் போதைப்பொருள் கடத்தியதாக மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை விசாரித்ததில் இதற்கு மூளையாக செயல்பட்டது ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.
 
 ஜாபர் சாதிக் திமுகவின் முக்கிய பிரபலம் என்பதும் திமுகவின் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவருக்கும் அமீர் உள்பட சில திரை உலக பிரபலங்களுக்கும் நெருக்கமான நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நான் ஜாபர் சாதிக் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கட்சியிலிருந்து திமுக நீக்கி உள்ளது என்பதும் அவரை தேடும்பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி சீல் வைத்து சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்