ஜாபர் சாதிக்கை மீண்டும் காவலில் எடுத்த அமலாக்கத்துறை.. கிடுக்கிப்பிடி விசாரணை..!

Mahendran
வெள்ளி, 19 ஜூலை 2024 (18:00 IST)
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் 4 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஏற்கனவே அமலாக்கத் துறை ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்த நிலையில் அந்த காவல் முடிந்தது. இந்த நிலையில்  மேலும் 12 நாட்கள் அமலாக்கத்துறை காவல் கோரிய நிலையில் 4 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கபப்ட்டுள்ளது.
 
மேலும் காவல் முடிந்து ஜூலை 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஜாபர் சாதிக்கை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க மேலும் 4 நாட்கள் நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ள நிலையில் இந்த விசாரணையில் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு பல உண்மைகளை வரவழைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
முன்னதாக டெல்லியில்  கடந்த பிப்ரவரி மாதம்  50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட  சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்,   திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் இந்த விவகாரத்தில் மூளையாக இருந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.  
 
இதனையடுத்து, போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்