ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருனர். அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமானவைகளாக பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், அரசுப் பள்ளிகளை மூடப் படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் ஆகியவைகளை முன்னிறுத்தினர். இது சம்மந்தமாக அந்த அமைப்பினருக்கும் அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக நேற்று சென்னை நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார். அவர் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் மற்றும் மாணவர்களுக்கு இது தேர்வுக் காலம் எனவும் நீதிபதிகள் முன்னர் வாதிட்டனர்.