மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியது பெரிய விஷயமல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக்கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் தோழமையும், நட்பும் என்றும் தொடரும். அதற்கு ஒரு அடையாளமாகத்தான் வருகிற 30ஆம்தேதி நல்லக்கண்ணு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேன்” என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிவிப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், வைகோவின் அறிவிப்பு குறித்து கூறியுள்ள சீமான், ‘’மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியது பெரிய விஷயமல்ல’’ என்று தெரிவித்தார்.
மேலும் கூறிய சீமான், ‘’துணை ராணுவத்தை வைத்து சோதனை நடத்தியது தமிழக அரசை மிரட்டி பணியவைக்கும் முயற்சி. ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கமளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.