நெல்லையில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆன்லைன் பண பரிமாற்றங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் சாபாநாயகரும் நெல்லை திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமாவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரி சோதனை குறித்து தகவல் அறிந்த திமுகவினர், அங்கு திரண்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.