சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் உயிரிழப்பு

Sinoj

புதன், 3 ஏப்ரல் 2024 (19:39 IST)
சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். 
 
இந்த நிலையில்உடல் நிலை சரியில்லாமல், ராஜேந்திரன்  என்ற முதியவர் இம்மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவருக்கு பெருமாள் ஆங்கில மருத்துவமனான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
 
ஊசி போட்ட 10 நிமிடங்களில் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார். ஊசி போட்டதால் உயிரிழந்த ராஜேந்திரனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்