துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பழனிசாமி டிவியில் பார்த்ததாக கூறியது தவறில்லை- அண்ணாமலை

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (21:24 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதை வைத்து அவர் பொய் சொன்னார் என்பது நீதியரசன் அருணா கெஜதீசன் ஆணையம் கூறியதை ஏற்க முடியாது என அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் கலவரவம் வெடித்தது. இதில், அப்பாவி மக்கள் 13 பேர் தூப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து,  நீதியரசர் அருணா  ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து,  துப்பாக்கிச் சூடு சம்பவத்ததை டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது தவறில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்ததை டிவியில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் எந எடப்படி பழனிசாமி சொன்னதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்?

 5 மணி நேரம் போராட்டம் குறித்து பல தகவல்களை தலைமைச் செயலரும், டிஜிபியும் முதல்வருக்கு கொடுத்திருக்கலாம்.  துப்பாக்கிச்சூடு நடந்தபோது அவரின் அலுவலக டிவி ஆன் செய்யப்பட்டு இருந்திருக்கலாம். அதை அவர் பார்த்திருக்கலாம். இதை வைத்து அவர் பொய் சொன்னார் என்பது நீதியரசன் அருணா கெஜதீசன் ஆணையம் கூறியதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்