இது என்ன ரூஸ்வெல்ட்- வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பா? ரஜினி-கமல் சந்திப்பு குறித்து ஜெயகுமார்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (11:03 IST)
நேற்றைய ஊடகங்களின் முக்கிய செய்தி நடிகர் ரஜினிகாந்தை அவரது நண்பர் கமல்ஹாசன் சந்தித்தது தான். இந்த சந்திப்பு பல்வேறு ஊகங்களையும் ஒருசில தெளிவையும் ஏற்படுத்தியது. பல்வேறு ஊகங்கள் எப்படி இருந்தாலும் இருவரும் இணைந்து அரசியலில் செயல்பட போவதில்லை என்பது மட்டும் நேற்றைய ரஜினியின் பேட்டியில் தெளிவாக தெரிந்தது
 
இந்த நிலையில் இந்த சந்திப்பை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் கூர்ந்து நோக்கி வருகின்றனர். குறிப்பாக திமுகவுக்கு இந்த சந்திப்பு கலக்கத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வெகு எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நிலை இருந்தது. ஆனால் திடீரென ரஜினி, கமல் அரசியல் களத்தில் குதிப்பதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயகுமார் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ரூஸ்வெல்ட்- வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பு போல ரஜினி- கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது. ரஜினி- கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப்போவது கிடையாது' என்று கூறினார். ஆனால் டுவிட்டர் பயனாளிகள் அமைச்சரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒருவர், 'ரூஸ்வெல்ட்- வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்பு நடந்ததால்தான் ஹிட்லர் ஒழிந்தார். ஆனால் நீங்கள் அவரளவுக்கு ஒர்த் இல்லை' என்று பதிவு செய்துள்ளார். உங்களுடைய கருத்துக்களையும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்