முதலிரவுக்கு பின் இப்படி ஒரு மோசமான வழக்கமா? மகாராஷ்டிரா அரசு கடும் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (14:01 IST)
கன்னித்தன்மை பரிசாதனையை  பாலியல் பலாத்காரத்துக்கு  நிகரான விஷயமாக  கருதி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மகாராஷ்டிரா அரசு எச்சரித்துள்ளது.



 
ஒரு பெண் கற்புடையவள் என்பதை நிரூபிக்க அவள் கன்னித்திரை முதலிரவில் தான் கிழியும் என்ற மூடநம்பிக்கை ஒரு காலத்தில் எல்லா இடங்களிலும் நிலவி வந்தது. இது தொடர்பாக பரிசோதனை செய்யும் வழக்கமும் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த வழக்கம் மறைந்துவிட்டது. ஆனால் மகாராஷ்டிராவின் கன்ஜார்பாத் சமூகத்தில், இன்றை சூழலிலும் கன்னித்தன்மை பரிசோதனை செய்வது  நடைமுறையில் இருக்கிறது. உள்ளது.
 
சில சமூகங்களில் ஒருகாலத்தில் நிலவிய இந்த கொடூர வழக்கம், இப்போது இல்லை என்றாலும், கன்ஜார்பாத் சமூகம் இதை விடுவதாக இல்லை. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு முதலிரவில்தான் கன்னித்திரை கிழிபட வேண்டும், அப்போதுதான் அவர் கற்புடைய பெண் என்பது இந்த சமூகத்தினரின் நம்பிக்கை.
 
முதலிரவு முடிந்த மறுநாள், கன்னித்தன்மையோடு தான் இருந்ததற்கான 'ஆதாரத்தை' அந்த பெண் குடும்ப மூத்த உறுப்பினர்களிடம் காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது.. முதலிரவில் பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் வர வேண்டும் என்றும், அந்த ரத்தத்தின் ஆதாரத்தை குடும்பத்திடம் காட்ட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி வருகிறார்கள்.
 
பெண் உறுப்பில் உள்ள சிறு திரை போன்ற அமைப்பு தான் மருத்துவ ரீதியாக கன்னித்திரை என அழைக்கப்படுகிறது . இதில் ஏதாவது பொருள் படும்போது, அந்த திரை கிழிபட வாய்ப்புள்ளது. அல்லது சைக்கிள் ஓட்டும் போதோ, ஓட்டப்பந்தயம் அல்லது நீளம் தாண்டுதலின் போதோ  மற்றும் சில கடினமான வேலைகள் செய்யும்போதும் கிழிபட வாய்ப்புள்ளது. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கன்னித்திரை இருந்தால்தான் அவர் கற்புடைய பெண் என கன்ஜார்பாத் சமூகத்தினர் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
 
இதுபோன்ற நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட கன்ஜார்பாத் பெண்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினார்கள். இதையடுத்து அந்த சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் இந்த வழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மகாராஷ்டிரா அரசு கவனத்திற்கு 
இந்த விவகாரம் சென்றுள்ளது.  இந்த நிலையில், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ரஞ்சித் பாட்டில் செய்தியாளர்களிடம் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், கன்னித்தன்மை சோதனை நடத்துவோரை பலாத்கார குற்றவாளிகளாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அனைத்து காவல்நிலையங்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்