சிறையில் தள்ளியது ஏன்? சசிலாவுக்கும் தினகரனுக்கும் உள்ளுக்குள் பனிப்போரா?
வியாழன், 19 செப்டம்பர் 2019 (10:07 IST)
சசிகலா முதல்வர் ஆகக்கூடாது என்பதற்காகவே சிறைக்கு அனுப்பினார்களா என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓரம்கட்டப்பட்டதால் அமமுக எனும் கட்சியை துவங்கிய டிடிவி தினகரன் இடைத்தேர்தலிலும், மக்களவைதேர்தலிலும் கடும் தோல்வியை சந்தித்தார். இதனால் அமமுகவில் இருந்து நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகி அதிமுக அல்லது திமுக என இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமமுகவை சேர்ந்த புகழேந்தி, டிடிவி தினகரனை பற்றி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் கட்சி மாற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
புகழேந்தியை எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் வகையில் டிடிவி தினகரன் அமமுக செய்தி தொடர்பாளர் பட்டியலில் புகழேந்தியின் பெயரை நீக்கினார். அதன் பின்னர் புகழேந்தி கட்சியை விட்டு யாராலும் என்னை நீக்க முடியாது என்றும், கட்சியே எனதுதான் என்றும் அதிராடி பேட்டியளித்தார்.
அதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் சசிகலா முதல்வர் ஆகக்கூடாது என்பதற்காகவே சிறைக்கு அனுப்பினார்களா என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது விரிவாக பின்வருமாறு,
சசிகலா முதல்வராக வரக் கூடாது என்பதற்காகவே சிறைக்கு அனுப்பினார்களா என்கிற சந்தேகம் எனக்கு உள்ளது. சசிகலாவுக்கு தினகரன் மீது அதிருப்தி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஏனென்றால் சிறையில் என்னைப் போன்றோரை வைத்துக் கொண்டு தினகரனிடன் பேசும்போது அவர் நன்றாகத்தான் பேசுகிறார். ஆனால், நாங்க வந்த பிறகு இருவரும் தனியாகப் பேசும்போது எப்படி பேசுகிறார் எனத் தெரியவில்லை.
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார். அமைச்சர் ஜெயக்குமாரை தவிர வேறு யாரும் சசிகலாவை விமர்சனம் செய்தது இல்லை எனவே, சசிகலா வெளியே வந்ததும் ஆட்சியாளர்கள் அவரை ஏற்றுக்கொள்வர்கள் என தெரிவித்துள்ளார்.