இதனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், ”தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறியது” என கேலி செய்தார். மேலும் வெளிநாட்டு பயணம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கூறினார். இவரை தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என கூறினார்.
இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவுக்கு எதிரியான திமுகவுடன் ரகசிய கூட்டணி ஒன்றை வைத்துள்ளார். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர் இல்லை, சிவாஜி கணேஷன் ரசிகர். ஆதலால் தான் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுகவை எதிர்க்கிறார்” என கூறியுள்ளார்.
இதற்கு முன் வெள்ளையறிக்கை வெளியிட சொல்லி கேட்ட ஸ்டாலினுக்கு பதில் கூறும் வகையில், வெள்ளையறிக்கையுடன், மஞ்சள், பச்சை அறிக்கையும் கூடவே வெள்ளரிக்காயையையும் சேர்த்தே ஸ்டாலினுக்கு தருகிறோம் என கேலியாக கூறியது சர்ச்சையை கிளப்பியது. தற்போது டிடிவி தினகரன் திமுகவுடன் ரகசிய கூட்டணி ஒன்றை வைத்துள்ளார் என கூறியுள்ளது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.