முதற்கட்டமாக, இன்று போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்லும் வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியவேலு, வாகன நம்பர் பிளேட் ஸ்டிக்கர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, காவல் துறை வாகனத்தில் இருந்து நாங்கள் இந்த நடைமுறையை ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.