முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் வரிவாய் 52% அதிகரித்துள்ளதாக சி.ஏ.ஜி அறிவித்துள்ளதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில், மிகை வருவாய் மா நிலமாக தமிழகம் இருக்கும் கடன் பெறத் தேவை இருக்காது என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு, பாஜக நிர்வாகி தனது டுவிட்டர் பக்கத்தில், நிதியமைச்சரே(@ptrmadurai) சவாலை ஏற்க தயாரா?பரம்பரை புகழ்பாடும் நிதியமைச்சரே, 2 ஆண்டுகள் கழித்து கண்டிப்பாக ஞாபகப்படுத்துவோம். அப்பொழுது மிகை வருவாய் மாநிலமாக தமிழகம் இல்லை எனில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.