மதுபோதையில் வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியை: அதிகாரிகள் அதிர்ச்சி...!

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (15:55 IST)
கர்நாடக மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு மதுபோதையில் பாடம் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள துபாபூர் என்ற பகுதியில் ஆசிரியையாக பணி செய்பவர் கங்கா என்பவர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்பட்ட நிலையில் பள்ளிக்கு மது பாட்டிலை கொண்டு வந்து மது அருந்தியபடி மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார் 
 
இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கண்டித்து நிலையில் ஆசிரியை கங்கா அதனை பெரிது படுத்தாமல் தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு பாடம் நடத்தியுள்ளார்
 
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்ற நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் வகுப்பிற்கு வந்து விசாரணை செய்ய வந்தபோது அவர் மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆசிரியை பணி நீக்கம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்