'அழையா விருந்தாளியா ரஜினி? இதோ ஒரு விளக்கம்

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (23:33 IST)
சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை கடந்த 4 இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது 
 
இந்த நிலையில் ஒருசிலர் இணையதளங்களில் இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் அட்டையை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு இந்த அழைப்பிதழில் ரஜினிகாந்த் பெயரே இல்லை என்றும், அப்படியானால் ரஜினிகாந்த் அழையா விருந்தாளியாக கலந்து கொண்டாரா? என்றும், அமித்ஷா, மோடி ஆகியோர்களை புகழ்ந்து பேசுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு அவர் கலந்து கொள்ள வைக்கப்பட்டாரா? என்றும் யூகங்களைத் நெட்டிசன்கள் பதிவு செய்து வந்தனர் 
 
இந்த நிலையில் இது குறித்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலிலேயே அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அவர் மும்பையில் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தன்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாது என்று கூறியுள்ளார். ஆனால் திடீரென மும்பையில் மழை பெய்ததால் தர்பார் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து கடைசி நேரத்தில் வெங்கையா நாயுடு அவர்கள் தனிப்பட்ட முறையில் விடுத்த வேண்டுகோளை ஏற்று படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக அவர் இந்த விழாவில் கலந்துகொள்ள மும்பையில் இருந்து கிளம்பி வந்தார். அதனால் தான் அவர் விழா ஆரம்பித்த பின் சில நிமிடங்கள் கழித்து விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ரஜினி ஏன் விழாவில் கலந்து கொள்ள மறுத்தார் என்பதையும் ,அதன் பின் கடவுள் மழையை பெய்ய வைத்து ரஜினியை கலந்துகொள்ள வைத்தார் என்றும் ஏற்கனவே வெங்கையா நாயுடு தனது உரையில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . கடைசி நேரத்தில் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதால் தான் அவருடைய பெயர் அழைப்பிதழில் இல்லை என்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பெயரும் இல்லை என்பதும், ஆனால் அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்