ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் உயர்வு? 94 ஆயிரத்தை தாண்டிய தங்கம்!

Prasanth K

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (09:43 IST)

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக ரூ.94 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு, தங்கத்தின் மீதான டாலர் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நாளுக்கு நாள் தங்கம் விலை அசுரகதியில் உயர்ந்து வருகிறது.

 

நேற்று மட்டுமே காலை, மாலை என இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம் விலை 22 காரட் சவரன் ரூ.92,640க்கு விற்பனையானது. இந்நிலையில் இந்த நாளின் தொடக்கமே தங்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

 

22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.245 உயர்ந்து ரூ.11,580 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் ரூ.1960 உயர்ந்து ரூ.94,600 ஆக விற்பனையாகி வருகிறது. இந்த வேகத்தில் சென்றால் இந்த மாதத்திற்குள்ளேயே தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டி விடும் என அஞ்சப்படுகிறது. தங்கத்தின் அசுர விலையேற்றம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்