அண்ணாமலை தன்னைத் தானே காறி துப்பிக் கொள்ள தயாரா? - திமுக அமைச்சர் கேள்வி!

Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (16:10 IST)

பாஜக பிரமுகரின் பாலியல் குற்றங்களுக்காக அண்ணாமலை தன்னைத் தானே எப்போது காறி துப்பிக் கொள்வார் என திமுக அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திமுகவின் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை என கண்டனம் தெரிவித்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தின. இதில் சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

 

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் சமீபத்தில் மதுரையில் 15 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து பேசியுள்ள திமுக அமைச்சர் கீதா ஜீவன் “அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து தனது வீட்டிற்கு முன்பு நின்று தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, பாஜகவின் எம்.எஸ்.ஷாவின் பாலியல் தொல்லைகளுக்காக கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ள தேதி குறித்துவிட்டாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்