ராகுல் காந்தி காங்கிரசுக்காக பாடுபடுகிறார், நான் நாட்டுக்காக பாடுபடுகிறேன். கெஜ்ரிவால் பதிலடி:

Siva
செவ்வாய், 14 ஜனவரி 2025 (15:50 IST)
முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி பல குற்றச்சாட்டுகளை தெரிவித்த நிலையில், "நான் நாட்டை காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்; ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை பாதுகாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்," என்று  பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், "பிரச்சாரத்தின் போது என்னை கொலை செய்ய ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனத்திற்கு இன்னும் அவர் பதில் அளிக்கவில்லை. அவர் காங்கிரஸ் மட்டுமே பாதுகாக்க முயற்சிக்கிறார்; ஆனால் நான் நாட்டை காப்பாற்ற போராடுகிறேன்," என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, "சாதி வாரி கணக்கெடுப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எந்த முயற்சியும் செய்யவில்லை. மோடியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒன்று; இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை," என்று ராகுல் காந்தி குற்றம் சுமத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்