கள்ளக்குறிச்சி கலவரம்: 10 முறை எச்சரித்த மாநில உளவுத்துறை

வியாழன், 21 ஜூலை 2022 (07:55 IST)
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு மிகப்பெரிய போராட்டம் நடந்தது 
 
இந்த போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போராட்டத்தையும் வன்முறையையும் கணிக்க தவறியது உளவுத்துறையின் தோல்வி என பல பத்திரிகையாளர்கள் கூறிவந்தனர்
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கலவரம் நடைபெறுவதற்கு முன்பாக மாநில உளவுத்துறை எச்சரிக்கை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
கள்ளக்குறிச்சி பள்ளியில் கலவரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை செய்ததாகவும் மாணவ அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் சேர்ந்து பள்ளியை சேதப்படுத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்தன
 
கலவரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தம் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த கலவரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்