கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முக்கியமாக, இரவு நேரங்களில் அதிக மொழி பொழிவு காணப்படுகிறது. மதுரையில் நேற்று பெய்த கனமழை காரணமாக, மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நீர் புகுந்தது.
இந்நிலையில், மத்திய அரபிக்கடலை ஒட்டிய கேரள மற்றும் கர்நாடகா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.