500, 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றுவிட்டு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது மத்திய அரசு, கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பழைய 500, 1000 ரூபய்களை வங்கியில் டெபாசிட் செய்து புதிய 500, 2000 ரூபாய்களை பெற அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் கடும் வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. சில இடங்களில் பணம் எரிக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
இதனையடுத்து வீணாகும் கருப்பு பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் எனவும் அப்படி கொடுக்க பயமாக இருந்தால் நாங்கள் பணத்தொட்டி திறக்கிறோம் அதில் போடுங்கள் என இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2.5 லட்சம் ரூபாய் வரை வங்கியில் டெபாஸிட் செய்யலாம் மத்திய அரசு. பல கோடி கருப்பு பணம் வைத்துள்ள செல்வந்தர்களே பலனற்று போகும் பணத்தை வறுமையில் வாழும் ஏழை மக்களுக்கு நபர் ஒருவருக்கு லட்சம் ரூபாய் கொடுத்து உதவுங்கள்.
ஏழை மக்களுக்கு கொடுக்க பயந்தால் இந்திய தேசிய லீக் கட்சி தலைமை அலுவலகத்தில் பண தொட்டி வைக்க உள்ளோம் அந்த தொட்டியில் நீங்க போட்ட பணத்தை ஏழை மக்களுக்கு இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் பகிர்ந்து வினியோகிப்பார்கள். இன்றைய 500, 1000 நோட்டுகள் நாளைய காகிதமாக மாறும். இப்போதே உங்கள் பணத்தை வறுமையில் வாழும் ஏழை மக்களுக்கு கொடுத்து உங்கள் பாவத்திற்கு பரிகாரம் தேடி கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது.