இந்த ஆண்டிலேயே செம மழை இங்கதான்! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (11:34 IST)
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் இந்த ஆண்டில் தமிழகத்தின் ஒரு ஊரில் அதிகமான மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவ காற்றால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அசாம் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களும் வெள்ள நீரில் மூழ்கின. தற்போது கேரளா, கர்நாடகா பகுதிகளிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் அதிகமான மழைப்பொழிவு உள்ள இடமாக இந்தியாவிலேயே முதல் இடத்தல் தமிழகத்தை சேர்ந்த அவிலாஞ்சி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் மற்ற பகுதிகளை விடவும் அதிகமாக அவிலாஞ்சியில் 58 செமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்