ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

Mahendran
வெள்ளி, 8 நவம்பர் 2024 (11:11 IST)
வெங்காயம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை ஆகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மழைக்காலத்தில் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்படும் என்பதால், வெங்காயத்தின் விலை உயரும் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி, வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் போன்ற காரணங்களாலும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதாகவும், ஒரு கிலோ மொத்த விலை 80 முதல் 90 ரூபாய் வரை, சில்லறை விலை 100 ரூபாயாக விற்பனையாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெங்காயத்தின் விலை 120 முதல் 130 ரூபாய் வரை உயரும் எனவும் இன்னும் சில வாரங்களுக்கு அதிக விலை விற்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து உணவுகளுக்கும் வெங்காயம் நிச்சயம் பயன்படுத்தப்படுவதால், வெங்காய விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்