4 மணி நேர போயஸ் கார்டன் சோதனை முடிவு: சிக்கிய ஆவணங்கள் என்ன?

சனி, 18 நவம்பர் 2017 (05:21 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனை வீடு முழுவதும் இல்லை என்றும், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் மட்டுமே சோதனை என்றும் வருமான வரித்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.


 


இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த சோதனை முடிவடைந்து 10 அதிகாரிகள் வெளியே வந்தனர். சோதனையில் கடிதங்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் ஆகியவைகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாகவும், அவற்றில் முக்கிய ஆவணங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை குறித்து விவேக் கூறியபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு வந்த கடிதங்களையும், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப் ஆகியவற்றையும்  வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். அம்மா ஜெயலலிதாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை' என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்