போயஸ் இல்லம் முன் கோஷம் போட்ட அதிமுக தொண்டர்கள் கைது

சனி, 18 நவம்பர் 2017 (00:50 IST)
கடந்த சில மணி நேரங்களாக வருமான வரித்துறையினர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையின்போது ஜெயா டிவியின் எம்.டி விவேக் மற்றும் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக வெளிவந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து வேதா இல்லம் முன் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் மோடி ஒழிக என்றும், மத்திய அரசு ஒழிக என்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் ஒழிக என்றும் கோஷமிட்டு வந்தனர்.

இந்த நிலையில் வருமான வரித்துறை மற்றும் மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்ட அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இதே கோஷத்தை போட்ட அதிமுக வழக்கறிஞர்கள் கைது செய்யப்படவில்லை. அதிமுக தொண்டர்கள் கைது காரணமாக போயஸ் கார்டன் இல்லமே பரபரப்பில் மூழ்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்