ஆனால், அதனை மறைத்து கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் மனு அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதில் சுக்காலியூர் முதல் குளித்தலை வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால், மாயனூர் முதல் குளித்தலை வரை 4 வழிச்சாலை அமைக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக சுங்க கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சுங்கச் சாவடியில் சுங்கம் வசூலிக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சுங்கச் சாவடியிலிருந்து 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவலறிந்து அங்கு வந்த போலீசாரிடம், அரசாணையை படி சுங்கச் சாவடி செயல்பட வேண்டும் என்றும் சாலைகளை அமைத்து விட்டு சுங்கம் வசூலிக்கட்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.