டில்லியில் 2021-2022ஆம் நிதியாண்டின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மதுபான கொள்கை மூலம் கோடி கணக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராகமாறு அமலாக்கத்துறையினர் மூன்று முறை சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் விசாரணை என்று அழைத்து கைது செய்வதே அவர்களின் நோக்கம் என கூறி அமலாக்கத்துறையினரிடம் ஆஜராவதை அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டார்.