பாஜகவின் ஆஸ்தான கூட்டணி கட்சி இப்போது திமுக பக்கம்: ஸ்டாலின் அதிரடி வியூகம்

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (12:21 IST)
தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுக மற்றும் திமுக தங்களது கூட்டணி கட்சிகளை உறுதி செய்ய தீவிரமாக செயப்பட்டு வருகின்றன. அதிமுக தேமுதிக கூட்டணி தேர்தல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
இந்நிலையில், திமுக சைலண்டாக தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார். 
 
இந்த சந்திப்பின் முடிவில் இந்திய ஜனநாயகக் கட்சி திமுகவிற்கு ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக கட்சி கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. இந்த முறையும் அதே கூட்டணியில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவை எதிர்க்கும் திமுக பக்கம் சாய்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும், கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க இந்திய ஜனநாயகக் கட்சி முயற்சித்த நிலையில் இன்று அதிரடியாக திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. 
 
மேலும், திமுகவிற்கு இந்திய ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதகாவும், தொகுதி ஏதும் கேட்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் பாமக இணைந்திருப்பதால் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்க இயலவில்லை என அக்கட்சி தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்