சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விழா நடத்திய மாணவர் மீது தாக்குதல்...

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (18:12 IST)
பாஜகவின் உத்தரவுக்கு எதிராக, மாட்டிறைச்சி விருந்து விழா நடத்திய ஐஐடி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


 

 
இந்தியா முழுவதும், இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதற்கும், விற்பனை செய்யப்படுவதற்கும் ஆளும் பாஜக அரசு சமீபத்தில் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாவட்டங்கள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
 
இந்நிலையில், பாஜக அரசின் உத்தரவிற்கு எதிராக சென்னை ஐஐடி மாணவர்கள் ஒன்றிணைந்து மாட்டுக்கறி திருவிழா நடத்தினர். அதில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மாட்டுக்கறி விருந்து படைக்கப்பட்டது. இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


 

 
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சுராஜ் என்ற மாணவர், இன்று மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சில  மாணவர்கள், அவரை கடுமையாக தாக்கினர். இதில் அவரின் வலது கண் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இந்த விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்