படங்கள் தோல்வி அடைந்தால்... நடிகர்கள் நஷ்ட ஈடு தர வேண்டும் - தீர்மானம் நிறைவேற்றம் !

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (19:38 IST)
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், தமிழக அரசின் மாநிலம் வரி 8 % -ஐ வரும் பிப்ரவரி மாதத்திற்குள் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் மார்ச் 1 ஆம் தேதி முதல்  திரையரங்குகள் மூடப்படும் என ஒருமனதாக தெரிவித்துள்ளனர்.
 
மேலும், படத் தயாரிப்பாளர்கள் படம் வெளியான 100 நாட்களுக்குல் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற டிஜிட்டல் டிஜிட்டல் தளங்களில் படங்களை வெளியிடக் கூடாது எனவும், அதை மீறி வெளியிட்டால் அவர்களின் படங்களை தியேட்டரில் திரையிர மாட்டோம் .
 
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வி அடைந்தால் அந்தந்த நடிகர்களே, தியேட்டர் உரிமையாளர் ,தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை ஈடுக்கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்