எடப்பாடியார் உத்தரவிட்டால் ஆயிரம் பேர் பார்டர்ல சண்டை போடுவோம்! - ராஜேந்திர பாலாஜி

Prasanth Karthick

புதன், 7 மே 2025 (14:58 IST)

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்திற்காக போர்க்களம் காண தயாராக உள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில் 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டு, 80க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

 

இந்த ராணுவ தாக்குதல் குறித்து இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டையும் கருத்துகளையும் கூறி வருகின்றனர். இந்நிலையில் போர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால், விருதுநகர் மாவட்ட அதிமுகவை சேர்ந்த 1000 இளைஞர்களும் எனது தலைமையில் யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி சண்டையிட தயாராக உள்ளனர்” என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்