இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

Siva

ஞாயிறு, 28 செப்டம்பர் 2025 (12:35 IST)
கரூர் கூட்டத்தில் நடந்த துயர சம்பவம் குறித்து சில சந்தேகங்கள் எழும்புகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த கருத்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஆம்புலன்ஸ் வந்ததாகவும், அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கட்டப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, இது போன்ற நிகழ்வுகள் சந்தேகத்தை கிளப்புவதாகக் கூறினார்.
 
10,000 பேருக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்ட நிலையில், 27,000 பேர் விபத்து நடந்த இடத்தில் கூடியதாகக் காவல்துறை விளக்கமளித்துள்ளதாகக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "இதற்கு முன்பு விஜய் நடத்திய பொதுக்கூட்டத்திலும் அவர்கள் எழுதி கொடுத்ததை விட அதிகமாகத்தானே கூட்டம் வந்தது? அதெல்லாம் போலீசாருக்கு தெரியாதா? இந்த அரசுக்கு தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், தன்னுடைய கடமையை தட்டிக்கழிப்பதற்காகவே இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு மீது அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்