பெரியாரை எண்ணி வணங்குகிறேன்- கமல்ஹாசன் டுவீட்

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (18:58 IST)
தந்தைப்பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரபலங்கள்  பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் பெரியர் பிறந்த நாளை முன்னிட்டு  பதிவிட்டுள்ளதாவது:

சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல்  வி.சி.க கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், #சனாதனம் என்பது ஆரியம்ஆரியம் என்பது பார்ப்பனியம்பார்ப்பனியம்என்பது இந்துத்துவம்இந்துத்துவம் என்பது  பார்ப்பனியம்-ஆரியம் எனும் சனாதனமே.எனவே,இந்துத்துவம் என்பதுபார்ப்பனரல்லாத பிற வர்ணம் - சாதிகளுக்கானதல்ல. இதனை முன்னுணர்ந்து எச்சரித்தவர்தான் பெரியார். சனாதனப் பகையே #பெரியார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்