ஜெயலலிதாவை போய் பார்க்க முடியாது: விஜயகாந்த் காட்டம்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2016 (10:01 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பூரண குணமடைந்து விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.


 
 
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள முதல்வரை அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி மருத்துவமனை சென்று விசாரித்து வருகின்றனர். ஆனால் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தேதிமுக தலைவருமான விஜயகாந்த் இன்னமும் சென்று நலம் விசாரிக்கவில்லை.
 
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து மதுரை பொதுக்கூட்டதில் பேசிய விஜயகாந்த் தான் ஜெயலலிதாவை போய் பார்க்காதது குறித்து விளக்கம் அளித்தார்.
 
இதில் பேசிய விஜயகாந்த், நான் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு சென்று பார்க்கலன்னு கேக்கறாங்க?. நான் ஏன் போகணும்? அவர் குணமாகி வரணும்னு தான் நினைக்கிறேன். அங்க போறவங்களோட நோக்கம் வேற, என் கட்சிக்காரன் மருத்துவமனையில் இருந்தா போய் பார்ப்பேன். அவங்கள நான் ஏன் போய் பார்க்கனும், அதனால தான் போகவில்லை என்றார்.
அடுத்த கட்டுரையில்