எனக்கு பயமில்லை: சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன்; தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (08:38 IST)
சோபியா வழக்கை சட்டப்படி சந்திக்க தயார் என்றும் இதற்கெல்லாம் பயப்படுபவள் நானல்ல என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பே 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷம் போட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
 
இந்த விவகாரத்தில் தமிழிசை தன்னையும் தனது குடும்பத்தினர்களையும் மிரட்டியதாக சோபியாவின் தந்தை கொடுத்த புகாரின்மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தில் இதுகுறித்து சோபியாவின் தந்தை வழக்கு தொடுத்தார்.
 
கடந்த 25ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கையை நவம்பர் 20ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன் தவறு செய்தது அந்த பெண் சோபியா தான். ஆகவே எனக்கு எந்த பயமும் இல்லை. வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என அதிரடியாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்