18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து

வியாழன், 25 அக்டோபர் 2018 (11:42 IST)
சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தகுதிநீக்கம் செல்லும் என சற்றுமுன் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இதனையடுத்து அதிமுக ஆட்சிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; காலம் தாழ்ந்து தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு குறித்து 18பேரும் முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது


டிடிவி தினகரன்: அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.  தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏக்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்.

திருமாவளவன்: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்தால் சாதகமான தீர்ப்பு வரும் என நம்புகிறேன் -

அமைச்சர் கடம்பூர் ராஜூ: 3வது நீதிபதி சத்தியநாராயணின் தீர்ப்பு வரவேற்கக்கூடியது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்