வைகோ கற்பனைக்கு பதில் சொல்லனுமா? - ஸ்டாலின் காட்டம்

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (16:23 IST)
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அவர்களின் 94ஆவது பிறந்தநாளை ஒட்டி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பேராசிரியரின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.


 

பின்னர் செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில், ”கலைஞர் அவர்களுடைய உற்ற தோழனாக, உற்ற சகோதரனாக எல்லா நிலைகளிலும், தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஏற்படக்கூடிய சோதனைகளாக இருந்தாலும், சாதனைகளாக இருந்தாலும், இரண்டிலும் இரண்டற கலந்திருப்பவர் நம்முடைய பேராசியர் அவர்கள்.

கலைஞருடைய உடல்நலம்  நான்றாக தேறி வருகிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் அவர் இல்லம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.

மேலும், வைகோ அடுக்கடுக்காக குற்றச்சாடுகள் வைக்கிறாரே? என்று கேள்வி எழுப்பியபோது, ”அவருடைய அபரிமிதமான கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்லி, தேவையற்ற நிலையை உருவாக்க நான் விரும்பவில்லை" என்று காட்டமாக தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்