நான் காந்தியின் பேரன்.. சாதிதான் என் முதல் எதிரி..! திமுகவை ஆதரிப்பது ஏன்? – கமல்ஹாசன் அளித்த விளக்கம்!

Prasanth Karthick
ஞாயிறு, 24 மார்ச் 2024 (16:49 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் அதுகுறித்து தனது கட்சி நிர்வாகிகளிடையே விளக்கமாக பேசியுள்ளார்.



தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், அரசியல் மாற்றம் தேவை என்றும் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியவர் கமல்ஹாசன். அப்போது ம.நீ.ம கட்சிக்காக தயாரித்த விளம்பரங்களில் கூட டிவியின் மீது ரிமோட்டை தூக்கி வீசி ஆவேசமாக பேசியிருந்தார். ஆனால் தற்போது மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் “ரிமோட்டை எடுத்து டிவியில் அடித்துவிட்டு, இப்போது அங்குதானே சென்றுள்ளீர்கள் என கேட்கிறார்கள். ஆனால் ரிமோட் இன்னும் என் கைகளில்தான் இருக்கிறது. டிவியும் நம்ம வீட்டு டிவிதான். ஆனால் அந்த டிவியின் கரெண்டையும், ரிமோட்டின் பேட்டரியையும் உருவப்பார்க்கும் சக்தி ஒன்றியத்தில் உள்ளது. இனி நான் ரிமோட்டை வைத்திருந்தால் என்ன வீசி எறிந்தால் என்ன?” என்று பேசியுள்ளார்.

ALSO READ: ஜெயலலிதா போல் செயல்படுவோம்.. விருதுநகரில் உதயநிதி பிரச்சாரம்..!

மேலும் ”ஒரு கட்சியோ, திட்டமோ எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை தகர்க்க வேண்டியது நம் கடமை. என் அரசியல் எதிர் யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். என் நினைவு தெரிந்தது முதல் நினைவு போகும் வரை சாதிதான் என் எதிரி. நான் காந்தியின் கொள்ளு பேரன். காந்தி இஸ்லாமியர்களுக்காக போராடி சாகவில்லை. மதசார்பற்ற இந்தியாவிற்காக போராடி செத்தார். அந்த மதசார்பற்ற இந்தியாவிற்காகதான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்