திமுக அரசுடன் கைகோர்க்க தயார்: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!

செவ்வாய், 28 நவம்பர் 2023 (08:03 IST)
தமிழகத்தில் ஏழை என்ற சமுதாயத்தை ஒழிக்க திமுக அரசுடன் கைகோர்க்க தயார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் என்ற  பாதயாத்திரையில் பேசிய அண்ணாமலை  இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அநியாயம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்றும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு 44 ஆயிரம் கோடி வருமானம் வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தை குடிகார மாநிலமாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாற்றி வருகிறார் என்றும் தமிழக முதலமைச்சர் ஏழைகள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுத்தால் அதற்கு திமுக அரசிடம் கைகோர்த்து பணிபுரிய நாங்களும் தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்

டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்