முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திங்கள், 27 நவம்பர் 2023 (13:53 IST)
சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் முழு திருவுருவச் சிலையை சிறப்பு விருந்தினரான உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் அவர்களின் துணைவியார் திருமதி சீதா குமாரி, மகன்  அஜயா சிங் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரது முன்னிலையில்  மாண்புமிகு முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 
இந்த நிகழ்ச்சியில்  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: ''வி.பி., சிங் முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவு முன்னேறி இருக்கின்றனர். ஒன்றிய அரசின் துறை செயலாளர்காள் 89 பேரில் 85 பேரும் ஒன்றிய அரசின் கூடுதல் செயலாளர்கள் 93   பேரில் 88 பேரும் உயர் ஜாதியினர். மத்திய பல்கலைக் கழகங்களில் இதுவரை இட ஒதுக்கீடே இல்லை. நீதிமன்றங்களில் 2018 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 74  பேர் மட்டுமே  பிற்படுத்தப்பட்டவர்காள். அரசுத்துறைகாளில் பதவி உயர்வின் போது இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுத்தப்படுவதில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும்,  'பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு முழுமையான முறையாக வழங்க வேண்டும். வி.பி. சிங் மறையலாம் ஆனால், அவர் ஏற்றி வைத்த சமூக நீதி என்னும் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது,' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்