நான் ஒருத்தனே போதும்! ரசிகர்களுக்கு கமல் அறிவுரை

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (22:32 IST)
உலக நாயகன் கமல்ஹாசனின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பல முக்கிய நகரங்களில் போஸ்டர் ஒட்டி கலக்கி வருகின்றனர். அரசியல்வாதிகள் கட்ட வேண்டியது எட்டு முழம் சேலை, முட்டாள் அரசியல்வாதிகள் என்பது உள்பட பல வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.



 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு போஸ்டர் கலாச்சாரம் தேவையில்லை என்று அறிவுரை வழங்கியுள்ளார். அவர் தனது டுவிட்டரில் "தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்' என்று கூறியுள்ளார். 
 
அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நான் ஒருவன் மட்டுமே போதும் என்ற தன்னம்பிக்கை கமலிடம் அதிகம் உள்ளதை இந்த டுவீட்டில் இருந்து பார்க்க முடிகிறது. மேலும் தனது ரசிகர்களை ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நற்குணமும் அவருக்கு உண்டு என்பது தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்